உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஓடிடியில் வெளியானது பெத்தி : விமர்சனமான ஜான்வி கபூரின் காட்சிகள் நீக்கம்

ஓடிடியில் வெளியானது பெத்தி : விமர்சனமான ஜான்வி கபூரின் காட்சிகள் நீக்கம்

புச்சிபாபு சனா இயக்கத்தில் ராம் சரண் நடித்த பெத்தி படம் ஜூன் 4ம் தேதி திரையரங்குகளில் வெளியானபோது, அதில் ஜான்வி கபூரின் கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்ட விதம் பெரும் விமர்சனத்திற்குள்ளானது. பல இடங்களில் அவரை கவர்ச்சியாக காண்பித்த விஷயங்கள் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டதுடன், பலரும் இது தேவையற்றது மற்றும் பெண்களை போகப்பொருளாக காட்டுவது போல் உள்ளது என்றும் குறிப்பிட்டனர்.

இந்த எதிர்ப்புகளை அடுத்து, இயக்குனர் புச்சி பாபு மன்னிப்பு கேட்டதோடு, அந்த சர்ச்சைக்குரிய காட்சிகளை படத்தில் இருந்து நீக்கினார். இந்நிலையில் ஜூலை 9ம் தேதியான நேற்று பெத்தி படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது. தியேட்டர்களில் வெளியான பதிப்பிற்குப் பதிலாக, எடிட் செய்யப்பட்ட புதிய பதிப்பையே ஸ்ட்ரீம் செய்து வருகிறது. ஓடிடி பதிப்பில் ராம் சரணின் வசனம் அப்படியே இருந்தாலும், ஜான்வி கபூரின் உடலமைப்பை முன்னிலைப்படுத்திய அந்த இடைச்செருகல் காட்சிகள் முழுமையாக நீக்கப்பட்டுள்ளன. ரசிகர்கள்இந்த மாற்றங்களைச் சுட்டிக்காட்டி, அதுகுறித்த வீடியோ கிளிப்புகளை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !