உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / எழுத்தாளர் சங்கத் தேர்தல்; பாக்யராஜ் பெயரில் இரு அணிகள் போட்டி

எழுத்தாளர் சங்கத் தேர்தல்; பாக்யராஜ் பெயரில் இரு அணிகள் போட்டி


தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் வரும் ஜூலை 19ம் தேதி நடக்கிறது. இதில் ‛நம்ம கே பாக்யராஜ் அணி' சார்பாக தலைவர் போட்டிக்கு இயக்குனர் சேரன் போட்டியிடுகிறார். பொதுச் செயலாளர் பதவிக்கு பட்டுக்கோட்டை பிரபாகரும், பொருளாளர் பதவிக்கு ஆர் சுந்தர்ராஜனும், இரு துணை தலைவர் பதவிக்கு சமுத்திரகனி, சினேகன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.

4 இணை செயலாளர் 4 பதவிக்கு பாஸ்கர் சக்தி, கேபி ஜெகன், நவீன், செல்வபாரதி ஆகியோர் போட்டியிடுகின்றனர். 12 செயற்குழு உறுப்பினர் பதவிக்கு அனுமோகன், பழநி பாரதி, சாய் ரமணி, செந்தில்நாதன் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

அதேபோல், ‛திரைக்கதை மன்னன் கே.பாக்யராஜ் அணி' சார்பாக தலைவர் பதவிக்கு வி.சி.குகநாதன், பொதுச்செயலாளர் மனோஜ்குமார், பொருளாளர் பதவிக்கு லியாகத் அலிகான் போட்டியிடுகின்றனர். துணை தலைவர்கள் பதவிக்கு ‛யார்' கண்ணன், ஏ.வெங்கடேஷ் போட்டியிடுகின்றனர்.

வரும் ஜூலை 19, ஞாயிறு அன்று, சென்னை, வடபழனியில் உள்ள திரை இசைக் கலைஞர்கள் சங்க அரங்கத்தில் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தேர்தல் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !