ஜூலை 17 ரிலீஸ் : பின் வாங்கும் 'அர்ஜுனன் பேர் பத்து'
ADDED : 2 days ago
விஜய்யின் கடைசி படமான 'ஜனநாயகன்' படம் அடுத்த வாரம் ஜூலை 23ம் தேதி வெளியாகும் எனத் தெரிகிறது. மிக விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகலாம். அதனால், ஜூலை 24ல் வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த கீர்த்தி சுரேஷ் நடித்த 'சத்தியவான் சாவித்திரி' படம் ஜூலை 31ல் அறிவிக்கப்பட்ட விஜய் மகன் இயக்கிய 'சிக்மா' படம் ஆகியவை வெளியாவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதனிடையே, இந்த வாரம் ஜூலை 17 வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்த யோகி பாபு நடித்துள்ள 'அர்ஜுனன் பேர் பத்து' படம் பின் வாங்கியுள்ளது. படத்திற்கான புதிய தேதி விரைவில் அறிவிக்கப்படலாம்.
'அன்பே டயானா, அருள்வான்' உள்ளிட்ட மற்ற படங்கள் திட்டமிட்டபடி வெளியாகின்றன. 'ஜனநாயகன்' வருகையால் அடுத்த மாதப் படங்களின் வெளியீடுகள் கூட மாறலாம்.