ரன்வீர் சிங் பற்றிய ரகசியத்தை உடைத்த பூஜா ஹெக்டே
தமிழ், தெலுங்கு, ஹிந்தி படங்களில் பிசியாக நடித்து வருபவர் பூஜா ஹெக்டே. இவருக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. பீஸ்ட் படத்தை அடுத்து விஜய்யுடன் அவர் இணைந்து நடித்துள்ள ஜனநாயகன் படம் ஜூலை 23ல் திரைக்கு வருகிறது. சமீபத்தில், பாலிவுட் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில், தன் சக நடிகர்களைப் பற்றிய சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அப்போது ரன்வீர் சிங் பற்றிப் பேசிய அவர், தான் அவரை அன்போடு பம்மி ஆன்ட்டி என்று அழைப்பதாகத் தெரிவித்தார்.
சர்க்கஸ் என்ற படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்காக அனைவரும் காத்துக் கொண்டிருந்தபோது, ரன்வீர் சிங் பாடலை பாடிக் கொண்டே உள்ளே நுழைந்து, அங்கிருந்த அனைவருக்காகவும் ஒரு முழுப்பாடலுக்கு நடனமாடி அசத்தினார். சுற்றியிருக்கும் அனைத்து விஷயங்களையும், முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ரன்வீர் சிங்கின் பழக்கத்தின் காரணமாகவே அவருக்கு பம்மி ஆன்ட்டி என்ற தான் செல்லப்பெயர் வைத்ததாக கூறியுள்ளார்.
பூஜாவின் இந்த சுவாரசியமான பகிர்வு சமூக ஊடகங்களில் வைரலாகி ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. அடுத்ததாக, ராகவா லாரன்சுடன் காஞ்சனா -4 என்ற ஹாரர், காமெடி படத்திலும், துல்கர் சல்மானுடன் இணைந்து ஸ்ரீஸ்ரீ என்ற காதல் படத்திலும் நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே.