முதல்வர் விஜயை சந்தித்தது குறித்து சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி பதிவு
ADDED : 1 days ago
தமிழக முதல்வராக விஜய் பொறுப்பேற்ற பின்னர் அவரை தொடர்ச்சியாக திரையுலகினர் சந்தித்து வருகின்றனர். நேற்று நடிகர் சிவகார்த்திகேயன் சந்தித்து பேசினார். இதுதொடர்பான போட்டோக்களை வெளியிட்டுள்ள அவர் அதன் உடன், ‛‛மக்களின் மனங்களை மகிழ்விப்பதில் தொடங்கி மாநிலத்தை வழிநடத்துவது வரை... சில பயணங்கள் உண்மையிலேயே அசாதாரணமானவை. தமிழகத்தின் முதல்வர் ஜோசப் விஜயை சந்தித்து வாழ்த்து தெரிவித்தது பெருமைக்குரிய தருணம்.
'ரசிகன் எக்ஸ்பிரஸ்' முதல் 'விஜய் விருதுகள்' மேடை வரை, 'GOAT' திரைப்படத்தில் இணைந்து நடித்தது முதல்... இப்போது உங்களுடன் இந்தத் தருணம் வரை; இது எப்போதும் மிகவும் சிறப்பானதாகவே இருக்கும். அதே சகோதரத்துவம், அதே பிணைப்பு தொடர்கிறது'' என சிவகார்த்திகேயன் குறிப்பிட்டுள்ளார்.