உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / அனிருத்துடன் இணைந்த வேடன்

அனிருத்துடன் இணைந்த வேடன்

கேரளாவைச் சேர்ந்த பிரபல ராப் பாடகர் வேடன். இவருக்கென்று தனி ரசிகர் வட்டம் உள்ளது. 'நாயாட்டு' படத்தின் மூலம் சினிமாவில் பாடகராக அறிமுகமானார். தமிழில் 'பைசன் காளமாடன்' படத்தில் பாடினார். தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நடிக்கும் 'டிசி' படத்தில் அனிருத் இசையில் ஒரு பாடல் பாடி உள்ளார்.

வேடன் கூறியிருப்பதாவது: என் இசை பயணத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை உங்ககூட பகிர்வதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். முதன் முறையாக ராக்ஸ்டார் அனிருத் ரவிச்சந்தருடன் சேர்ந்து ஒரு பாட்டு பாடுற வாய்ப்பு எனக்குக் கிடைச்சிருக்கு. வரப்போற ' டிசி' படத்துக்காக நடந்தது. இது ஒரு மறக்க முடியாத எக்ஸ்பீரியன்ஸ். கோடிக்கணக்கான மக்களைத் தன்னோட மியூசிக்கால இன்ஸ்பையர் பண்ணிய அனிருத் கூட வொர்க் பண்ணது எனக்குக் கிடைச்ச பெருமை, என்னோட ஒரு பெரிய கனவு நிறைவேறியிருக்கு. சூவ்வொரு புதிய இணைவும் புதிய அனுபவத்தை தருகிறது. அந்த வகையில இது எனக்கு ரொம்ப ஸ்பெஷல்.

ஸ்டுடியோல அனிருத் எனர்ஜி, பேஷன், அப்புறம் அவரோட கிரியேட்டிவிட்டி எல்லாமே செம்ம இன்ஸ்பைரிங்கா இருந்தது. இந்த டிராக்க ரெக்கார்ட் பண்ணது எப்பவும் என் மனசுக்கு நெருக்கமான ஒரு மெமரியா இருக்கும். என் மேல நம்பிக்கை வச்சு இந்த சூப்பரான வாய்ப்பைக் கொடுத்த படக்குழுவினர் எல்லாருக்கும் என்னோட மனமார்ந்த நன்றிகள். நாங்க எவ்வளவு என்ஜாய் பண்ணி இந்த பாட்டை உருவாக்கினோமோ, அதே மாதிரி கேக்குற உங்களுக்கும் இது ரொம்ப பிடிக்கும்னு நம்புறேன். பாட்டோட ரிலீஸ்க்காக நான் வெயிட் பண்ணிட்டு இருக்கேன். நாங்க பண்ண வொர்க்கை நீங்க எல்லாரும் கேக்குறதுக்காக வெயிட் பண்ணிட்டு இருக்கேன். என்று கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

Kannan
2026-07-18 18:12:09

புண்ணாகக்கும் புண்ணாக்கும் வேறு என்ன சொல்ல