ரூ.50 கோடி வசூலில் 'கட்டா குஸ்தி 2'
ADDED : 15 hours ago
செல்லா அய்யாவு இயக்கத்தில், விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி மற்றும் பலர் நடிப்பில் ஜூலை 3ல் வெளியான படம் 'கட்டா குஸ்தி 2'. ரசிகர்களின் வரவேற்பைப் பெற்ற இப்படம் தற்போது 50 கோடி வசூலைத் தொட்டுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரத் திங்களன்று இப்படம் 44 கோடியே 50 லட்சம் வசூலித்ததாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார்கள். கடந்த ஒரு வாரத்தில் இப்படம் சுமார் 6 கோடி வசூலைத் தொட்டு தற்போது 50 கோடி வசூல் பெற்றுள்ளதாம்.
3வது வாரத்திலும் உலக அளவில் 450 தியேட்டர்களில் படம் ஒடிக் கொண்டிருக்கிறது என இரண்டு தினங்களுக்கு முன்பு தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது.
இந்த வருடத்தில் 50 கோடி வசூலைக் கடந்துள்ள 8வது படமாக 'கட்டா குஸ்தி 2' இடம் பிடித்துள்ளது. வசூல் ரீதியாகவும் லாபத்தைக் கொடுத்துள்ளது.