விஸ்வநாத் அண்ட் சன்ஸ் டிரைலர் வெளியீட்டு தேதி உறுதியானதா?
ADDED : 1 hours ago
வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் ஆகஸ்ட் 14ம் தேதி திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இதில், மமிதா பைஜு கதாநாயகியாக நடிக்க, ரவீனா டாண்டன், ராதிகா சரத்குமார், பவானி ஸ்ரீ மற்றும் பிஜோர்ன் சுர்ராவ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
படத்தின் வெளியீட்டுத் தேதி நெருங்கி வருவதால், படக்குழுவினர் படத்தின் புரொமோஷன் பணிகளைத் தீவிரமாகத் தொடங்கியுள்ளனர். தற்போது வெளியாகியுள்ள தகவல்களின்படி, படத்தின் டிரைலர் வருகின்ற ஆகஸ்ட் 2ம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிகிறது. என்றாலும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. இப்படத்தில் சஞ்சய் விஸ்வநாத் என்ற கதாபாத்திரத்தில் 40 வயதைக் கடந்த சர்வதேச துப்பாக்கி சுடும் வீரராக சூர்யா நடித்துள்ளார்.