டிக்கெட் முன்பதிவில் சாதனை படைக்கும் ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே
கடந்த 2021ம் ஆண்டு ஜான் வாட்ஸ் இயக்கத்தில் வெளியான ஹாலிவுட் படம் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம். இப்படத்தில் டாம் ஹாலண்ட் நாயகனாக நடித்திருந்தார். 200 மில்லியன் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம், பாக்ஸ் ஆபிஸில் 1.921 பில்லியன் வசூலித்தது. அதையடுத்து தற்போது டெஸ்டிங் டேனியில் கிரேட்டன் இயக்கத்தில் டாம் ஹாலன்ட் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‛ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே'. இந்த படம் நாளை வெளியாகிறது.
இந்தியாவில் இப்படத்திற்காக டிக்கெட் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ள நிலையில், முன்பதிவு மூலம் மட்டும் இதுவரை இப்படம் ரூ.35 கோடி அளவுக்கு வசூலை பெற்றுள்ளதாக பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் ஸ்பைடர் மேன் நோ வே ஹோம் படத்தை விட இந்த ஸ்பைடர் மேன் பிராண்ட் நியூ டே படத்திற்கு ரசிகர் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வசூல் சாதனை படைக்கும் என்றும் எதிர்பார்க்கிறார்கள்.