உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் புதிய வரவுகள்: இந்த வார ஓடிடி ரிலீஸ்...!

ஹார்ட் பீட்டை எகிற வைக்கும் புதிய வரவுகள்: இந்த வார ஓடிடி ரிலீஸ்...!

வாரந்தோறும் வெள்ளிக்கிழமை வந்தால் ஓடிடி ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான் என்பது போல, இந்த வாரமும் 'டபுள் ட்ரீட்' தரும் வகையில், பல சூப்பர் ஹிட் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்கள் வெளியாகவுள்ளது. அவை என்னென்ன என்பது குறித்துத் தெரிந்து கொள்ளலாம்.

கட்டா குஸ்தி 2
இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்ய லட்சுமி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'கட்டா குஸ்தி 2'. திரையரங்கில் வெளியாகி ரூ.50 கோடிக்கும் மேல் வசூல் செய்தது. குஸ்தி விளையாட்டு உடன் குடும்ப பின்னணியை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம் நாளை (ஜூலை 31ம் தேதி) நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகவுள்ளது.

லவ் ஓ லவ்
புதுமுக இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவிஷ் நாராயணன், நாக துர்கா மற்றும் வனிதா விஜயகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் ' லவ் ஓ லவ்'. இந்த படம் நாளை (ஜூலை 31ம் தேதி) அமேசான் ப்ரைமில் வெளியாகவுள்ளது.

சின்ன சின்ன ஆசை
மலையாள இயக்குநர் வர்ஷா வாசுதேவ் இயக்கத்தில் நடிகை மதுபாலா, இந்திரன்ஸ், அபர்ணா பாலமுரளி, தம்பி ராமையா, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்த பீல் குட் திரைப்படம் 'சின்ன சின்ன ஆசை'. இந்த படம் ஜூலை 28ம் தேதி ஜியோ ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.

பைத்தலாட்டம் (Paithalattam)
மலையாள இயக்குநர் விபின் என்.வேலாயுதன் இயக்கத்தில், தன்யா அனன்யா, மிதுன் சம்பு மற்றும் ஜெயன் சேர்த்தலா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'பைத்தலாட்டம்'. இந்த படம் நாளை (ஜூலை 31ம் தேதி) சன் நெக்ஸ்ட்டில் வெளியாகியுள்ளது.

அப்ஜக் ஷன் மை லார்டு (Objection my lord)
தெலுங்கு இயக்குநர் சந்தோஷ் அய்யப்பன் இயக்கத்தில் ஸ்ரீகாந்த் மேகா உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்துள்ள வெப் தொடர் ‛அப்ஜக் ஷன் மை லார்டு'. இந்த தொடர் நாளை (ஜூலை 31ம் தேதி) ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.

தீவானா (Deewana)
தெலுங்கு இயக்குநர் ஸ்ரீகாந்த் சங்கி ஷெட்டி இயக்கத்தில் ஹர்ஷித் ரெட்டி மற்றும் ஸ்மேகா மணிமேகலை உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'தீவானா'. இந்த படம் நாளை (ஜூலை 31ம் தேதி) ஆஹா வீடியோவில் வெளியாகவுள்ளது.

பாலன் தி பாய் (Balan the boy)
சிதம்பரம் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் 'பாலன் தி பாய்'. இந்த படம் நாளை (ஜூலை 31ம் தேதி) தமிழ், தெலுங்கு, கன்னட மொழிகளில் ஜீ5 தளத்தில் வெளியாகவுள்ளது.

செகண்ட் மேரேஜ் (Second marriage)
தெலுங்கு இயக்குநர் ரவி மகாதாஸ்யம் இயக்கத்தில், மவுனிகா ரெட்டி, ரவி மகாதாஸ்யம், சுஜாதா கரு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் 'செகண்ட் மேரேஜ்'. இந்த படம் இன்று (ஜூலை 30ம் தேதி) ஈடிவி விண் தளத்தில் வெளியாகியுள்ளது.

ஹார்ட் பீட் சீசன் 3 (Heart Beat season 3)
இயக்குநர் தீபக் சுந்தர் ராஜன் இயக்கத்தில், மூன்றாவது சீசனாக வெளியாகியுள்ள வெப் தொடர் 'ஹார்ட் பீட் சீசன் 3'. இந்த தொடர் இன்று (ஜூலை 30ம் தேதி) ஹாட் ஸ்டாரில் வெளியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !