அல்லு அர்ஜூனின் 'புஷ்பா-2' சாதனையை முறியடித்தது 'ராமாயணா'
நிதேஷ் திவாரியின் இயக்கத்தில் உருவாகி வரும் 'ராமாயணா' படம், திரையரங்குகளில் வெளியாவதற்கு முன்பே தொடர்ந்து செய்திகளில் இடம்பெற்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. இப்படத்தின் ஆடியோ உரிமையை பிரபல தயாரிப்பு நிறுவனமான டி-சீரிஸ் ரூ.75 கோடி என்ற பிரமாண்ட தொகைக்குக் கைப்பற்றியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது இந்திய சினிமாவில் மிகப்பெரிய ஆடியோ ரைட்ஸ் ஒப்பந்தங்களில் ஒன்றாகும். இந்த ராமாயணா படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இசையமைத்துள்ளார்கள்.
ராமாயணா படம் இசை உரிமையில் ஒரு புதிய மைல்கல்லைப் பதிப்பதோடு, அல்லு அர்ஜூனின் புஷ்பா-2 படத்தின் சாதனையை முறியடித்துள்ளது. புஷ்பா -2 படத்தின் ஆடியோ உரிமை சுமார் ரூ. 65 கோடிக்கு விற்பனையானது. 'புஷ்பா: தி ரைஸ்' படத்தின் இசைக்காக தேசிய விருது வென்ற தேவி ஸ்ரீ பிரசாத், புஷ்பா -2 படத்திற்கும் இசையமைத்துள்ளார்.
ரன்பீர் கபூர், சாய் பல்லவி, யஷ் ஆகியோர் நடித்துள்ள இப்படம், 2026 தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வரவுள்ளது. இதன் டிரைலர் ஜூலை 30ம் தேதியான இன்று வெளியாகியுள்ளது.