உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / இந்தியாவில் முதல் நாளில் 70 கோடி வசூலித்த 'ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே'

இந்தியாவில் முதல் நாளில் 70 கோடி வசூலித்த 'ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே'

உலகம் முழுவதும் நேற்று வெளியான 'ஸ்பைடர்மேன் - பிராண்ட் நியூ டே' படம் இந்தியாவில் முதல் நாள் வசூலாக சுமார் 70 கோடியை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. ஒரு ஹாலிவுட் திரைப்படம் வெளியான முதல் நாளில் இவ்வளவு தொகையை வசூலித்துள்ளது இதுவே முதல் முறை என்கிறார்கள்.

உலக அளவில் மொத்தமாக 100 மில்லியன் யுஎஸ் டாலருக்கும் சற்று அதிகமாக வசூலித்திருக்கலாம் என்றும் சொல்கிறார்கள். மொத்தமாக முதல் நாள் வசூலாக இந்திய ரூபாய் மதிப்பில் 1000 கோடியை இந்தப் படம் கடந்திருக்கிறது.

இறுதி வசூல் நிலவரம் வரும் போது இந்தத் தொகை இன்னும் அதிகமாக வாய்ப்புள்ளது. இந்த வார இறுதிக்குள்ளாக இந்தப் படத்தின் வசூல் 2000 கோடியைக் கடக்குமா என்ற எதிர்பார்ப்பு தற்போது எழுந்துள்ளது.

இப்படத்தின் மொத்த பட்ஜெட் 200 மில்லியன் யுஎஸ் டாலர் என்பது தகவல். பட்ஜெட்டை விடவும் இந்தப் படம் அதிக வசூலைக் குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தின் வருகை இந்திய மொழிப் படங்களின் வசூலை பாதித்துள்ளது.

இதில் கூடுதலாக அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்தின் முதல் நாள் இந்திய வசூலான 63 கோடியையும் இந்தபடம் முறியடித்துள்ளதாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !