உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ராஷி கண்ணாவுக்கு ரஜினிகாந்த் தந்த 'கிப்ட்'

ராஷி கண்ணாவுக்கு ரஜினிகாந்த் தந்த 'கிப்ட்'

அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில், ரஜினிகாந்த், சிம்ரன், ராஷி கண்ணா மற்றும் பலர் நடிக்கும் 'தர்மன்' படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகி நடந்து வருகிறது. ரஜினிகாந்துடன் முதல் முறையாக நடிக்கும் வாய்ப்பைப் பெற்றுள்ளார் ராஷி கண்ணா.

அவருடைய இன்ஸ்டா தளத்தில் தனக்கு ரஜினிகாந்த் தந்த கிப்ட் பற்றி, “ரஜினிகாந்த் சாரிடமிருந்து சிந்தனைக்குரிய ஒரு பரிசு மற்றும் ஒரு அமைதியான பாடம். சில நேரங்களில், வளர்ச்சி என்பது மேலும் பலதாக மாறுவதல்ல, மாறாக, நீங்கள் யாராகவோ வேடமிட்டு நடித்துக் கொண்டிருக்கிறீர்களோ, அந்தப் போலியான பிம்பங்களைக் கைவிடுவதே வளர்ச்சி,” என்று குறிப்பிட்டு அந்த கிப்ட் எது என்பதைப் பற்றி வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

“தர்மன்' படத்தில் ரஜினிகாந்த் சாருடன் நடித்துக் கொண்டிருந்த போது ஆன்மிகம் பற்றியும் எங்களது பேச்சு இருந்தது. அப்போது அவர் என்னிடம், 'லிவிங் வித் தி ஹிமாலயன் மாஸ்டர்ஸ்' புத்தகத்தைப் படித்தீர்களா என்று கேட்டார். நான் இல்லை என்று சொன்னேன். இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர் இந்த புத்தகத்தை எனக்கு பரிசளித்தார்.

கடந்த இரண்டு வாரங்களாக இந்த புத்தகத்தை ஆர்வத்துடன் படித்து வருகிறேன். அவர் எனக்கு டெஸ்ட் வைப்பேன் என்றும் சொன்னார்,” என அந்த புத்தகத்தில் இடம் பெற்றிருந்து ஒரு பக்கத்தைப் பற்றியும் வாசித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !