உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'பட்வாரா 1947' ரிலீசை முன்னிட்டு உ.பி முதல்வரை சந்தித்த சன்னி தியோல், ப்ரீத்தி ஜிந்தா

'பட்வாரா 1947' ரிலீசை முன்னிட்டு உ.பி முதல்வரை சந்தித்த சன்னி தியோல், ப்ரீத்தி ஜிந்தா

பாலிவுட்டின் இயக்குனர் ராஜ்குமார் சந்தோஷி வரலாற்று கதைகளை இயக்குவதற்கு பெயர் பெற்றவர். அந்த வகையில் தற்போது அவர் 'பட்வாரா 1947' என்கிற படத்தை இயக்கியுள்ளார். சன்னி தியோல் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா நடிப்பில் உருவாகியுள்ள இப்படம், இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு இரண்டு நாடுகளாக பிரிவினை அடைந்ததையும், அதனால் ஏற்பட்ட வன்முறையாலும் இடப் பெயர்வாலும் சிதைந்து போன ஒரு குடும்பத்தின் கதையை மையமாகவும் கொண்டு இது உருவாகியுள்ளது. வரும் ஆகஸ்ட் 14-ம் தேதி இப்படம் வெளியாக இருக்கிறது.

தற்போது இந்த படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகள் ஒரு பக்கம் நடைபெற்று வரும் நிலையில், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத்தை சன்னி தியோல் மற்றும் ப்ரீத்தி ஜிந்தா ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றுள்ளனர். இது குறித்த புகைப்படங்களையும் தங்களது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !