உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஸ்லம்டாக் : தபுவின் முன்னோட்ட வீடியோ வெளியானது

ஸ்லம்டாக் : தபுவின் முன்னோட்ட வீடியோ வெளியானது

பூரி ஜெகன்னாத் மற்றும் விஜய் சேதுபதி கூட்டணியில் ஸ்லம்டாக் : 33 டெம்பிள் ரோடு என்ற படம் உருவாகி வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு இப்படத்தின் டீசர் வெளியான பிறகு, படக்குழுவிடமிருந்து பெரிய அறிவிப்புகள் எதுவும் வெளியாகாமல் இருந்தது.

இப்போது இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகை தபு, ‛கவுரி ஹெக்டே' என்ற கதாபாத்திரத்தில் நடிப்பதை வெளிப்படுத்தி, அவரின் கேரக்டர் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அவரது கதாபாத்திரத்தை பற்றிய முன்னோட்ட வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். அதில் தபு, வருமான வரித்துறை இணை ஆணையராக ஒரு கம்பீரமான, அச்சமற்ற அதிகாரியாக வருகிறார்.

பூரி ஜெகன்னாத், சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்படும் இப்படத்தில் சம்யுக்தா, துனியா விஜய், பிரம்மாஜி, விடிவி கணேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் , மலையாளம் என ஐந்து மொழிகளில் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !