விஷால் 'மகுடம்' படத்துக்குபின் இவ்வளவு கணக்குகளா?
விஷால் இயக்கும் முதல் படம் 'மகுடம்'. தமிழ், தெலுங்கில் ஆகஸ்ட் 14ல் ரிலீஸ் ஆகிறது. இந்த படத்தில் 3 கெட்அப் அல்லது கேரக்டரில் விஷால் வருகிறார். இது விஷால் நடிக்கும் 35வது படம், சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிக்கும் 99வது படம். இந்த படத்தின் மூலம் விஷாலை 45வது இயக்குனராக சூப்பர்குட் நிறுவனம் அறிமுகம் செய்கிறது. விஷாலின் 22வது ஆண்டு சினிமா வாழ்க்கையில் இந்த படம் வெளியாகிறது. ''இயக்குனர் ஆக வேண்டும் என்பது என் 35 ஆண்டுகால கனவு. அதற்காக 4 மணி நேரம் நின்று, என்னை அர்ஜூனிடம் உதவியாளராக சேர்த்துவிட்டார்'' என கூறியுள்ளார் விஷால்.
கடந்த ஆண்டு ஜனவரி மாதம் விஷால் நடித்த 'மதகஜராஜா', 13 ஆண்டுகளுக்குபின் வெளியாகி வெற்றி பெற்றது. அந்த படம் 75 கோடி வசூலையும் அள்ளியது. கிட்டத்தட்ட ஒன்றரை ஆண்டுகளுக்குபின் மகுடம் இந்த வாரம் வெளியாக உள்ளது. இதற்கு முன்பு 'துப்பறிவாளன் 2' படத்தில் விஷால் நடித்தார். மிஷ்கின் இயக்கினார். லண்டனில் படப்பிடிப்பு நடந்தது. ஆனால், சில பிரச்னைகளால் அந்த படம் நின்றது. அந்த படத்தை தானே இயக்கப்போவதாக விஷால் அறிவித்தார். அது எப்போது வரும் என தெரியவில்லை. மகுடம் படத்துக்குபின் விஷால் நடிக்க, சுந்தர். சி இயக்கும் 'புருஷன்' படம் வர உள்ளது. இயக்குனராக விஷால் ஜெயிப்பாரா என்பது அடுத்த வாரம் தெரிந்துவிடும்.