உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / சிவாஜியின் அன்னை இல்லம் இடிப்பா?: திடீர் பரபரப்பு

சிவாஜியின் அன்னை இல்லம் இடிப்பா?: திடீர் பரபரப்பு


தமிழ் சினிமாவின் அடையாளங்களாக இருந்த பல, இப்போது இடிக்கப்பட்டு வணிக வளாகங்களாக, குடியிருப்பு பகுதிகளாக மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக ஏவிஎம் ஸ்டூடியோ இப்போது உருக்குலைந்து போய்விட்டது. இந்த நிலையில் இன்னொரு அடையாளமான நடிகர் சிவாஜி கணேசன் வாழ்ந்த அன்னை இல்லமும் இடிக்கப்படுவதாக நேற்று தகவல் பரவியது.

சென்னை தி.நகர் போக் சாலையில் பிரமாண்டமாக அமைந்திருக்கும் அன்னை இல்லத்தில்தான் சிவாஜி கடைசிவரை வாழ்ந்தார். அன்னை இல்லத்தில் கால்பதித்து வயிறார சாப்பிடாத திரைபிரபலங்களே இல்லை. தற்போது அந்த வீட்டில் ராம்குமார், பிரபு குடும்பங்கள் வசித்து வருகிறது. இருவருக்கும் சொத்து பிரச்னை இருந்து வருவதால் இப்படியான ஒரு தகவல் பரவியது.

என்றாலும் இந்த தகவல் உண்மைதான். ஆனால் இடிக்கப்படுவது போக் ரோட்டில் சிவாஜி வாழ்ந்த 'அன்னை இல்லம்' அல்ல. அவர் அதற்கு முன்பு வாழ்ந்த கோபாலபுரத்தில் உள்ள 'அன்னை இல்லம்'. போக் ரோட்டில் அன்னை இல்லம் கட்டியபிறகு அந்த வீட்டில் பராமரிப்பு பணி நடந்தாலோ, அல்லது தனியாக இருக்க வேண்டும் என்று நினைத்தாலோ சிவாஜி 'இந்த அன்னை' இல்லத்துக்கு வருவார் என்கிறார்கள்.

சிவாஜி மறைவுக்குப் பிறகு சொத்து பிரிவின்படி இந்த 'அன்னை இல்லம்' சிவாஜியின் மகள்கள் சாந்தி, தேன்மொழிக்கு சொந்தமானது. அவர்கள் இங்கு குடியிருந்து வந்தார்கள். இந்த நிலையில் அவர்கள் இந்த வீட்டின் ஒரு பகுதியை ஒரு பிரபல கட்டுமானத்திற்கு கொடுத்திருக்கிறார்கள். தற்போது அதில் அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் (1)

ananthu, chennai
2026-08-13 07:37:42

Great actor Sivajis Annai illam had get demolished but inside article - other property won by sivaji get demolished that also not fully only part of property in process of conversion into multi-story building by flat promoters and that property won by daughters s of sivaji -1. article heading misleading 2. if daughterss won some property of sivaji means why they filed legal notice against sons of sivaji few years before. Always decedents of Great people not keep the glory of their great father/ancestors. local proverb said by our ancestors son of teacher is not brilliant