சிக்மா படத்தில் யுவன் பாடிய பாடலுக்கு வரவேற்பு எப்படி
தமிழக முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் படம் சிக்மா. சந்தீப் கிஷன், பரியா அப்துல்லா ஜோடி சேர்ந்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தின் முதல் பாடலான சிக்மா ஸ்டைல் ஏற்கனவே வெளியாகி வரவேற்பைப் பெற்றதைத் தொடர்ந்து, தற்போது அய்யய்யோ அம்மாடி என்ற இரண்டாவது பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். தமன் இசையில் உருவாகியுள்ள இந்த துள்ளலான பாடலை இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா மற்றும் சஞ்சனா திவாகர் கல்மாஞ்சே இணைந்து பாடியுள்ளனர்.
இந்த பாடல் சந்தீப் கிஷன்- பரியா அப்துல்லா ஆகிய இருவரை மையமாகக் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது. இதில் அவர்களின் கெமிஸ்ட்ரியும், சுறுசுறுப்பான நடிப்பும் தனித்து நிற்கின்றன. இப்பாடலின் துள்ளல் இசைக்கு ஏற்றவாறு இருவரின் ஆற்றல்மிக்க நடனமும் பாடலின் ஈர்ப்பைக் கூட்டியுள்ளது. பாடல் வெளியாக 20 மணிநேரம் கடந்துள்ள நிலையில் 6.40 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகள் கிடைத்துள்ளன.