2 பில்லியன் வசூலைக் கடந்த 'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே'
டெஸ்டின் டேனியர் கிரெட்டான் இயக்கத்தில் டாம் ஹாலண்ட், ஜெண்டாயா மற்றும் பலர் நடிப்பில் ஜூலை 30ம் தேதி உலகம் முழுவதும் வெளியான ஹாலிவுட் திரைப்படம் 'ஸ்பைடர்மேன் பிராண்ட் நியூ டே'.
இப்படம் 17 நாட்களில் 2 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்து சாதனை படைத்துள்ளது. வெளியான 6 நாட்களில் இப்படம் ஒரு பில்லியன் வசூலைக் கடந்தது குறிப்பிட வேண்டிய ஒன்று. இதற்கு முன்பு 'அவஞ்சர்ஸ் என்ட் கேம்' படம் 11 நாட்களில் 2 பில்லியன் வசூலைப் பெற்று முதலிடத்தில் உள்ளது.
'பிராண்ட் நியூ டே' படம் அமெரிக்காவில் 785 மில்லியன் யுஎஸ் டாலர், வெளிநாடுகளில் 1236 மில்லியன் யுஎஸ் டாலர் தொகையை வசூலித்துள்ளது. இந்தியாவில் மட்டுமே இப்படம் 500 கோடி வசூலைக் கடந்து தற்போது 550 கோடி வசூலை நெருங்கிக் கொண்டிருக்கிறது.
உலக அளவில் இந்தப் படத்துடன் சேர்த்து 7 படங்கள் 2 பில்லியன் யுஎஸ் டாலர் வசூலைக் கடந்துள்ளன.
2009ல் வெளிவந்த அவதார் - 2.9 பில்லியன்
2019 - அவஞ்சர்ஸ் எண்ட் கேம் - 2.8 பில்லியன்
2022 - அவதார் தி வே ஆப் வாட்டர் - 2.3 பில்லியன்
1994 - டைட்டானிக் - 2.2 பில்லியன்
2015 - ஸ்டார் வார்ஸ் தி போர்ஸ் அவேக்கன்ஸ் - 2.07 பில்லியன்
2018 - அவஞ்சர்ஸ் இன்பினிட்டி வார் - 2.05 பில்லியன்