விஸ்வநாத் அண்ட் சன்ஸ் : தமிழை விட தெலுங்கில் அதிக வசூல்
தெலுங்கு தயாரிப்பு நிறுவனம், தெலுங்கு இயக்குனர் இயக்கிய படம் என்பதால் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்திற்கு தமிழை விட தெலுங்கில் அதிக வரவேற்பு கிடைத்து வருகிறது.
சூர்யா, மமிதா பைஜு மற்றும் பலர் நடிப்பில் கடந்த வாரம் வெளியான படம் இரண்டே நாட்களில் 100 கோடி வசூலைக் கடந்துள்ளது. இப்படத்தின் முதல் இரண்டு நாள் வசூலிலும் தமிழை விட தெலுங்கில்தான் அதிக வசூல் என டோலிவுட் பாக்ஸ் ஆபீஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழை விட சில கோடிகள் தெலுங்கில் கூடுதலாக வசூலித்திருக்கிறது. ஒரு நேரடி தெலுங்குப் படத்திற்குக் கிடைப்பது போன்ற வரவேற்பு இருப்பதாகச் சொல்கிறார்கள்.
படத்திற்கான வியாபாரம் சூர்யாவின் முந்தைய படமான 'கருப்பு' படத்தை விட அதிகமாக நடந்திருக்கிறது. படம் லாபத்தைப் பெற இன்னும் 100 கோடி வசூலைப் பெற வேண்டும் என்கிறார்கள். அதை இந்த வார இறுதிக்குள் கடந்துவிட வாய்ப்புள்ளது.