உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ஆகஸ்ட் 21ல் ‛ஜெயிலர் 2' முதல் பாடல் வெளியீடு

ஆகஸ்ட் 21ல் ‛ஜெயிலர் 2' முதல் பாடல் வெளியீடு

ஜெயிலர் படத்தின் வெற்றியை தொடர்ந்து இயக்குனர் நெல்சன், நடிகர் ரஜினி கூட்டணியில் உருவாகி உள்ள படம் ‛ஜெயிலர் 2'. முதல்பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், மிர்னா மேனன் உள்ளிட்டோருடன் எஸ்ஜே சூர்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார்.

இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. வரும் அக்., 15ல் படம் வெளியாக உள்ளது. அதேசமயம் இதன் வெளியீட்டில் மாற்றம் ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் படத்திலிருந்து முதல் பாடலை வரும் ஆகஸ்ட் 21ம் தேதி வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !