உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / ரஜினியின் 'தர்மன்' படத்தில் முக்கிய வேடத்தில் ராம் பொத்தினேனி!

ரஜினியின் 'தர்மன்' படத்தில் முக்கிய வேடத்தில் ராம் பொத்தினேனி!


கமல்ஹாசன் தயாரிப்பில் ரஜினிகாந்த் நடிக்கும் 'தர்மன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடக்கத்தில் இயக்குநர்கள் மாற்றப்பட்டது உள்பட சில தடைகளைச் சந்தித்த பிறகு, இறுதியாக அஷ்வத் மாரிமுத்துவிடம் இப்படத்தை இயக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம்கட்ட படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இப்படத்தில் சிம்ரன், ராஷி கண்ணா, யோகிபாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த தர்மன் படத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி இணையவுள்ளதாக ஒரு புதிய தகவல் வெளியாகியுள்ளது. இதில் அவர் ரஜினியின் மருமகனாக நடிக்கவுள்ளதாகவும், இருவரும் மோதிக்கொள்ளும் காட்சிகள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த ராம் பொத்தினேனி 2022ல் லிங்குசாமி இயக்கிய 'தி வாரியர்' என்ற படத்தில் நடித்தவர். மேலும், அனிருத் இசையமைக்கும் இப்படம் 2027ல் திரைக்கு வரவுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !