உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 10 தோல்விகளுக்குப் பிறகு அடுத்தடுத்து ஹிட்ஸ், சூர்யாவின் 13 வருடங்கள்…

10 தோல்விகளுக்குப் பிறகு அடுத்தடுத்து ஹிட்ஸ், சூர்யாவின் 13 வருடங்கள்…


தமிழ் சினிமாவில் உள்ள அழகான ஹீரோக்களில் ஒருவர் சூர்யா. 1997ல் வெளிவந்த 'நேருக்கு நேர்' படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர். கடந்த 30 வருடங்களாக அவருக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.

ஆனால், சூர்யாவுக்குக் கடந்த 13 வருட திரையுலகப் பயணம் சிறப்பாக அமையவில்லை. அவரது கடைசி வெற்றிப் படமாக 2013ல் வெளிவந்த 'சிங்கம் 2' இருந்தது. அதற்குப் பிறகு 'அஞ்சான்' படத்தில் ஆரம்பித்த அவரது தோல்வி தொடர்ந்து 13 வருடங்களுக்கு நீடித்தது.

“மாசு என்கிற மாசிலாமணி, 24, சி 3 (சிங்கம் 3), தானா சேர்ந்த கூட்டம், என்ஜிகே, காப்பான், எதற்கும் துணிந்தவன், கங்குவா, ரெட்ரோ” என கடந்த வருடம் வரை அவரது தோல்வி இருந்தது. இடையே 'சூரரைப் போற்று, ஜெய் பீம்' படங்கள் வரவேற்பை பெற்றிருந்தாலும், அந்த இரு படங்களும் ஓடிடியில் வெளியாகி இருந்தன.

இந்த வருடம் மே மாதம் வெளிவந்த 'கருப்பு' திரைப்படம் சூர்யாவின் பில்மோகிராபியை அப்படியே மாற்றிவிட்டது. அவரது 30 வருட திரையுலகப் பயணத்தில் முதல் முறையாக 300 கோடி வசூலை அந்தப் படம் பெற்றுத் தந்தது.

அதற்கடுத்து கடந்த வாரம் வெளியான 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படம் 150 கோடி வசூலைக் கடந்து ஓடிக் கொண்டிருக்கிறது.

இத்தனை வருடங்கள், இத்தனை தோல்விகள் வந்தாலும் துவளாமல் இருந்தவருக்கு இந்த வருடம் இரண்டு ஹிட்ஸ்கள் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !