ஷோலோ ஹீரோயினாக நடிக்கும் கவுரி கிஷன்
ADDED : 6 hours ago
'96' படத்தில் சிறுவயது ஜானகியாக நடித்து புகழ் பெற்றவர் கவுரி கிஷன். அதன்பிறகு மாஸ்டர், கர்ணன், அடியே, உலகம்மை, ஹாட் ஸ்பாட், போட், லவ் இன்சூரன்ஸ் கம்பெனி படங்களில் நடித்தார். தமிழ் படங்களுக்கு நிகராக மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்தார். தற்போது முதன் முறையாக ஷோலோ ஹீரோயினாக 'தாரகை' என்ற படத்தில் நடிக்கிறார்.
இப்படத்தை க்ரிஷ் எழுதி இயக்குகிறார். காளி வெங்கட், ஸ்ரீமன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைக்கிறார். சுந்தர் சுகுமாரன் ஒளிப்பதிவு செய்கிறார். ஸ்பீட் ரீல்ஸ் ஸ்டுடியோ தயாரிக்கிறது.
ஒரு பெண்ணின் பயணத்தை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. பயணம், உறவுகள், வாழ்க்கைத் தேர்வுகள் மற்றும் சுதந்திரம் குறித்த கேள்விகளை முன்வைக்கும் படமாக உருவாகியுள்ளது. கவுரி கிஷன் டைட்டில் கேரக்டரில் நடிக்கிறார்.