உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 3 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மகிமா நம்பியார்

3 வருடங்களுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மகிமா நம்பியார்

'சாட்டை' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் மகிமா நம்பியார். அதன்பிறகு மொசக்குட்டி, குற்றம் 23, புரியாத புதிர், கொடிவீரன், மகாமுனி, சந்திரமுகி 2, உள்ளிட்ட படங்களில் நடித்தார். 3 வருடங்களுக்கு முன்பு நடித்த நாடு படம்தான் அவர் தமிழில் கடைசியாக நடித்தது. தற்போது அவர் சூரி ஜோடியாக நடித்து வரும் படம் 'மண்டாடி'. இந்த படம் வருகிற 10ம் தேதி வெளியாகிறது.

படத்தின் பணிகள் முடிந்து தணிக்கை செய்யப்பட்டு 'யுஏ' சான்றிதழ் பெற்றுள்ளது. கடலோர மக்களின் வாழ்க்கை, பாரம்பரியம், உணர்வுகள், அவர்களின் மன உறுதியை மையமாகக் கொண்ட ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமாவாக உருவாகி இருக்கும் இந்த படத்தை மதிமாறன் புகழேந்தி இயக்கி இருக்கிறார்.

ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் சார்பில் எல்ரெட் குமார் தயாரித்திருக்கும் இந்தப் படத்தில் சுஹாஸ், சத்யராஜ், ரவீந்திரா விஜய், மிதுன், பால சரவணன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். ஜி.வி.பிரகாஷ் இசையில் எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவில் படம் தயாராகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !