உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / என் மனம் இந்த அதிர்ச்சியை ஏற்கவில்லை : சவுகார் ஜானகி மறைவுக்கு பாடகி பி சுசீலா இரங்கல்

என் மனம் இந்த அதிர்ச்சியை ஏற்கவில்லை : சவுகார் ஜானகி மறைவுக்கு பாடகி பி சுசீலா இரங்கல்

தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த சவுகார் ஜானகி, நேற்று தனது 94 வயதில் சென்னையில் உடல்நலக் குறைவால் காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினர் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர். சவுகார் ஜானகியின் புகழ் பெற்ற படங்களில் உள்ள பிரபலமான பல பாடல்களை பாடகி பி சுசீலா பாடி உள்ளார். சவுகார் ஜானகியின் மறைவுக்கு பி சுசீலா இரங்கல் தெரிவித்துள்ளார்.

அதில், ‛‛என் இனிய தோழி சவுகார் ஜானகியின் மறைவை கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். எங்கள் உறவு பல வருடங்களை கடந்த உறவு. சினிமாவைத் தாண்டி எங்கள் உறவு நீடித்தது. முக்கியமாக ஸ்ரீ சத்யா சாய் பாபாவின் பக்தைகளாக திகழ்ந்த போது பாபா தொடர்புள்ள விழாக்களில் இணைந்து பணியாற்றியது ஒரு பாக்கியம். என் மனம், இந்த அதிர்ச்சி தரும் நிகழ்வை முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாத நிலையில் இந்த பதிவின் வாயிலாக அவரின் குடும்பத்தினருக்கு என்னுடைய ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டு, அவரின் ஆன்மா இறைவனடியை சேருமாறு இறைவனை பிரார்த்திக்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !