உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / நான் தண்ணி, தம் அடிப்பதில்லை : கவின்

நான் தண்ணி, தம் அடிப்பதில்லை : கவின்

விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின், நயன்தாரா நடித்துள்ள ‛ஹாய்' படம் ஆக., 28ம் தேதி வெளியாகிறது. வித்தியாசமான காதல் கதையில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு உள்ளது. டிரைலரும், பாடல்களும் ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இந்நிலையில் இப்பட நிகழ்ச்சியில் பேசிய கவின், ‛‛நான் நிஜ வாழ்க்கையில் சிகரெட் குடிக்கமாட்டேன் , சரக்கு அடிக்க மாட்டேன். முடிந்த அளவுக்கு அதை சினிமாவில் தவிர்க்கலாம் என்று முயற்சிக்கிறேன். படத்தில் அந்த காட்சிகள் வந்தால், அது அந்தக் கதைக்கும், காட்சிக்கும் மிகவும் தேவைப்பட்டால் மட்டும்தான் நடிக்கிறேன். நம்மளால் முடிந்த அளவுக்கு இந்த சமூகத்துக்கு எதுவும் கெடுதல் பண்ணாமல் இருந்தாலே போதும் என்று தான் பார்க்கிறேன்'' என தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !