இன்ஸ்டா முழுவதும் நடிகையரின் ஓணம் புகைப்படங்கள்
மமிதா பைஜு முதல் மீனா வரை என இந்தக் காலம் முதல் அந்தக் காலம் வரையில் பிரபலமாக இருக்கும் பல சினிமா நடிகையர் அவர்களுடைய ஓணம் கொண்டாட்டப் புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்கள்.
இன்ஸ்டா முழுவதும் நடிகையரின் இந்தப் புகைப்படங்கள் லைக்குகளை அள்ளியுள்ளது. ரசிகர்கள், ரசிகைகள், சினிமா பிரபலங்கள் என பலரும் ஓணம் வாழ்த்துகளை நேற்று தெரிவித்துள்ளார்கள். மலையாள நடிகர்கள் பலரும் அவர்களது ஓணம் கொண்டாட்டப் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளார்கள். மதம், மொழி, இனம் கடந்து பலரும் இந்தப் பண்டிகையைக் கொண்டாடி உள்ளார்கள்.
மலையாள நடிகைகள் மட்டுமல்லாது மற்ற மொழி நடிகைகளும் ஓணம் கொண்டாடியுள்ளனர். பூஜா ஹெக்டே, கீர்த்தி சுரேஷ், மமிதா பைஜு, நஸ்ரியா, லிஜோமோள் ஜோஸ், நிகிலா விமல், அனுபமா பரமேஸ்வரன், அபர்ணா தாஸ், ரியா ஷிபு, மடோனா செபாஸ்டியன், மகிமா நம்பியார், கவுரி கிஷன், மாளவிகா மோகனன், ஐஸ்வர்யா மேனன், ஷிவதா, அனிகா சுரேந்திரன், அபிராமி, பாவனா, ஜனனி, மீனா, ரோஜா என பலரும் பகிர்ந்துள்ள படங்கள் ரசிகர்களின் லைக்குகளால் நிரம்பியுள்ளது.
நடிகைகளின் ஓணம் கிளிக்ஸ் அடங்கிய புகைப்பட லிங்க் இதோ.... https://www.dinamalar.com/photos/web-stories/onam-special-actress-clicks/5786