உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / விஜய் தேவரகொண்டாவின் ‛ரணபலி' ரிலீஸ் தேதியில் மாற்றம்

விஜய் தேவரகொண்டாவின் ‛ரணபலி' ரிலீஸ் தேதியில் மாற்றம்

ராகுல் சங்கிருத்தியன் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா, ஹாலிவுட்டின் ‛மம்மி' பட புகழ் வில்லன் ஆர்ணால்டு வோஸ்லூ ஆகியோர் முதன்மை வேடத்தில் நடித்து வரும் படம் ‛ரணபலி'. வரலாற்றுப் பின்னணி கொண்ட அதிரடி திரைப்படமாக உருவாகிறது. தெலுங்கில் உருவாகும் இப்படம் தமிழ், மலையாளம், ஹிந்தி என பான் இந்தியா படமாக வெளியாக உள்ளது. இந்த படத்தில் புரட்சிகர வீரராக நடித்துள்ளார் விஜய் தேவரகொண்டா.

இந்த படம் துவங்கி அறிவிப்பு வீடியோ வெளியிட்டபோதே செப்டம்பர் 11ம் தேதி ரிலீஸ் என குறிப்பிட்டு இருந்தனர். ஆனால் இப்போது புதிய ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். அதன்படி படம் அக்., 16ம் தேதி வெளியாகும் என விஜய் தேவரகொண்டா இருக்கும் புதிய போஸ்டருடன் அறிவித்துள்ளனர்.

இன்னும் படப்பிடிப்பு சம்பந்தப்பட்ட காட்சிகள் முடியவில்லையாம். அதன்காரணமாக ரிலீஸ் தேதியை ஒரு மாதம் தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !