உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 30வது வருடத்தில் மீண்டும் ஒரு 'ஒன்ஸ்மோர்' ரிலீஸ்

30வது வருடத்தில் மீண்டும் ஒரு 'ஒன்ஸ்மோர்' ரிலீஸ்

2026ம் வருடத்தின் 8வது மாதமான ஆகஸ்ட் மாதத்தின் கடைசி வெள்ளிக்கிழமையான 28ம் தேதியான இன்று “அமரம், ஹாய், ஒன்ஸ்மோர்,” ஆகிய மூன்று நேரடி தமிழ்ப் படங்கள் மட்டுமே வெளியாகிறது.

'அமரம்' என்ற தலைப்பில் ஏற்கெனவே மம்முட்டி நடித்த மலையாளப் படம் 1991ம் ஆண்டு வெளியாகி உள்ளது. 'ஹாய்' என்ற பெயரில் இதற்கு முன்பு எந்த ஒரு படமும் இந்தியாவில் வெளியாகவில்லை என்றே தெரிகிறது. ஆனால், 'ஓ…ஹாய்' என்ற பெயரில் ஹாலிவுட்டில் கடந்த வருடம் ஒரு படம் வெளியாகி இருக்கிறது.

'ஒன்ஸ்மோர்' என்ற தலைப்பில் 2018ல் ஒரு மராத்தி படம் வெளியாகி இருக்கிறது. அதற்கும் முன்பாக 1997ல் இப்போதைய தமிழக முதல்வரான விஜய் மற்றும் சிவாஜி கணேசன், சிம்ரன், சரோஜாதேவி நடித்த ஒரு படம் வெளியாகி இருக்கிறது.

சுமார் 30 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரே பெயரில் ஒரு படம் வெளியாகிறது. தமிழ் சினிமாவில் பழைய படங்களின் பெயர்களுடன் புதிய படங்கள் வருவது வழக்கமான ஒன்றுதான்.

இந்த வருடத்தில் இதற்கு முன்பாக, 'பராசக்தி, யூத், மகுடம்' ஆகிய படங்கள் பழைய படப் பெயர்களுடன் வெளிவந்துள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !