தொடர் படப்பிடிப்பு, சினிமா நிகழ்ச்சிகள் : ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன மமிதா
சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' மற்றும் நிவின் பாலியின் 'பெத்லகேம் குடும்ப யூனிட்' என இரண்டு பட நிகழ்ச்சிகள் படப்பிடிப்பு என ஓடிக் கொண்டே இருந்த மமிதா பைஜூவிற்கு உடல் நலக்குறைவு ஏற்பட ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆகி யுள்ளார். ஆஸ்திரேலியாவின் க்ளைடில் உள்ள மலையாளி சமூகத்தினருக்காக ஒரு வீடியோவில், செப்டம்பர் 5-ம் தேதி ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த ஓணம் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள இயலாது என்பதைத் தெரிவித்தார். இதையடுத்து, அந்த நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டது.
அவர்களிடையே பேசிய நடிகை மமிதா, ‛‛நான் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறேன். எனக்கு ஏதேனும் ஒரு வழியில் கலந்து கொள்ள வாய்ப்பு இருந்திருந்தால் கண்டிப்பாக வந்திருப்பேன். ஆனால் மருத்துவர்கள் எனக்கு முழு ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். அதிக காய்ச்சல், உடல் வலி, அலர்ஜி மற்றும் ஆஸ்துமா பிரச்னைகளால் தற்போது பயணம் செய்வது எந்த வகையிலும் சாத்தியமில்லை'' என்று கூறியுள்ளார்.
இப்போது அவர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக அவர் தரப்பினர் தெரிவித்துள்ளனர்.