உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / டொரோன்டோ விழாவுக்குச் சென்ற 'டோரதி' குழு

டொரோன்டோ விழாவுக்குச் சென்ற 'டோரதி' குழு

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில், கீர்த்தி சுரேஷ், ரிஷிகாந்த், சனந்த் மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டோரதி'. இப்படத்தின் இரண்டு பாடல்கள், டீசர் ஆகியவை வெளிவந்து வரவேற்பை பெற்றுள்ளன. இளையராஜாவின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் பேசு பொருளானது.

செப்டம்பர் 25ம் தேதி வெளியாக உள்ள இப்படம் கனடா நாட்டின் டொரோன்டோ சர்வதேச திரைப்பட விழாவில் இன்று மாலை உலக ப்ரிமீயர் செயப்படுகிறது. இதற்காக இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ், ரிஷிகாந்த், சனந்த் ஆகியோர் கனடா சென்றுள்ளனர்.

“கார்த்தி, சுப்பு மற்றும் நான்….டோரதியின் பயணம் இன்று ஆரம்பமாகிறது. ஒரு கனவு நனவாகிறது” என இது குறித்து கார்த்திக் சுப்பராஜ் குறிப்பிட்டுள்ளார். படத்தின் நாயகர்கள் இருவருக்குமே தனது பெயரைப் பிரித்து கார்த்தி, சுப்பு என வைத்துள்ளார் என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !