உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / பரத் நடித்துள்ள வெப் தொடர் வெளியானது

பரத் நடித்துள்ள வெப் தொடர் வெளியானது

தமிழ் நடிகர் பரத் நடித்துள்ள தெலுங்கு வெப் தொடர் 'பஞ்சநாமா'. தமிழ் உள்ளிட்ட பல மொழிகளில் இன்று (செப்.11) ஜி5 ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது. மோகன் ஸ்ரீவத்சா இயக்கியுள்ள இந்த புலனாய்வு திரில்லர் தொடரில், ஜெய் ராம் என்ற போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் பரத் நடிக்கிறார். இவருடன் மேதா ரெட்டி, சிவாஜி ராஜா, சூர்யா சீனிவாஸ், ஸ்ரீஜா, ராதிகா ப்ரீத்தி, சரண் பாபு மற்றும் சிவ கார்த்திக் தண்டா ஆகியோரும் நடித்துள்ளனர்.

குற்றம், மர்மம் மற்றும் உணர்ச்சிப்பூர்வமான நாடகம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் 6 அத்தியாயங்களைக் கொண்ட புலனாய்வு திரில்லர் தொடர் இது. விபத்து என்று புறக்கணிக்கப்பட்ட தனது தம்பியின் மரணத்தை, காவல்துறை அதிகாரி ஜெய் ராம் (பரத் ) விசாரித்து, தொடர்ச்சியான மர்ம மரணங்களுடன் தொடர்புடைய ஒரு ஆழமான குற்ற வலையமைப்பை வெளிக்கொணர்வதை இந்தக் கதை விவரிக்கிறது.

இது குறித்து பரத் கூறும்போது “பஞ்சநாமாவின் க்ரைம் -த்ரில்லர் திரைக்கதை மற்றும் அதன்மீதான ஈர்ப்பு காரணமாக தேர்ந்தெடுத்தேன். தெலுங்கு ரசிகர்களுடன் மீண்டும் இணைவதற்கான ஒரு வாய்ப்பாகவும் இதைக் கண்டேன். எனது ஜெய் ராம் கதாபாத்திரம், நான் இதற்கு முன் நடித்த காவல்துறை கதாபாத்திரங்களிலிருந்து வேறுபட்டது” என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !