உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / மீனவனாக நடித்தது பாக்கியம் : சூரி நெகிழ்ச்சி

மீனவனாக நடித்தது பாக்கியம் : சூரி நெகிழ்ச்சி

மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் சூரி, மகிமா நம்பியார், சுஹாஸ், உள்ளிட்டோர் நடிப்பில் திரைக்கு வந்துள்ள படம் ‛மண்டாடி'. மீனவர்கள் பின்னணியில் கடலில் நடக்கும் பாய் மர படகு போட்டியை பின்னணியாக கொண்டு இப்படம் வெளியாகி உள்ளது. ரசிகர்களிடமும் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்றுள்ளது. முதல்நாளில் இப்படம் உலகளவில் ரூ.8 கோடி வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் இப்படம் பற்றி சூரி கூறியதாவது, ‛‛இந்த படம் வெற்றி பெறும் என்ற உறுதியோடு தான் கடலில் பல மாதங்கள் கிடந்து, கஷ்டப்பட்டோம். அதற்கான பலன் கிடைத்துள்ளது. படத்தின் வெற்றியை மீனவர்களுக்கு சமர்ப்பிக்கிறோம். மீனவனாக நடித்தது என் பாக்கியம். இந்த எங்கள் ஒட்டுமொத்த படக்குழுவிற்கு கிடைத்த வெற்றி'' என நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !