உள்ளூர் செய்திகள்

/ சினிமா / செய்திகள் / 'மூக்குத்தி அம்மன் 2' டீசர் வெளியீடு: நவ.6ல் படம் ரிலீஸ்

'மூக்குத்தி அம்மன் 2' டீசர் வெளியீடு: நவ.6ல் படம் ரிலீஸ்


ஆர்.ஜே.பாலாஜி இயக்கி நடித்த 'மூக்குத்தி அம்மன்' படத்தில் அம்மனாக நடித்திருந்தார் நடிகை நயன்தாரா. படம் ஹிட் ஆனது, நயன்தாரா அம்மன் வேடத்தில் நடித்ததும் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். இந்நிலையில், இரண்டாம் பாகத்தை சுந்தர்.சி இயக்கியுள்ளார். முதல் பாகத்தைக் காட்டிலும் பெரிய பட்ஜெட் மற்றும் பிரமாண்டமான காட்சியமைப்புகளுடன் இப்படம் உருவாகியுள்ளது.

இப்படத்தின் டீசர் நேற்று வெளியானது. மஹாசக்தியின் எழுச்சி என்ற பெயரில் ரிலீசான டீசரில், புராண பின்னணியையும், தற்போதைய காலகட்டத்தையும் இணைக்கும் வகையில் கதைக்களம் அமைக்கப்பட்டிருப்பது தெரிய வருகிறது. மக்களின் நம்பிக்கையாகவும், தீமையை எதிர்கொள்ளும் தெய்வீக சக்தியாகவும் நயன்தாராவின் கதாபாத்திரம் டீசரில் முக்கியத்துவம் பெறுகிறது.

நயன்தாராவுடன் துனியா விஜய், ரெஜினா கசாண்ட்ரா, ஊர்வசி, யோகி பாபு, மைனா நந்தினி, கருடா ராம் என பலர் நடித்துள்ளனர். இப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நவ.,6ல் ரிலீசாவதாக அறிவித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !