மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் சித்ரா பவுர்ணமி திருவிளக்கு பூஜை
ADDED :131 days ago
செஞ்சி: மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் சித்ரா பவுர்ணமி முன்னிட்டு திரு விளக்கு பூஜை நடந்தது.
விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு திரு விளக்கு பூஜை நடந்தது. இதை முன்னிட்டு அதிகாலை 4 மணிக்கு அங்காளம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர். மாலை 6.00 மணிக்கு உற்சவர் அங்காளம்மன் மீனாட்சியம்மன் அலங்காரத்தில் திருவிளக்கு பூஜை நடைபெறும் மண்டபத்தில் எழுந்தருளினார். இரவு 7 மணிக்கு 108 பெண்கள் கலந்து கொண்ட திருவிளக்கு பூஜை நடந்தது. கோவில் பூசாரிகள் திருவிளக்கு பூஜையை நடத்தினர். திருவிளக்கு பூஜையில் பங்கேற்ற பெண்களுக்கு சேலை உள்ளிட்ட மங்கள பொருட்களை பிரசாதமாக வழங்கினர். இதில் இந்து சமய அறநிலையத்துறையினர், அறங்காவலர்கள், கோவில் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.