மங்கலதேவி கண்ணகி கோயிலில் உலா வந்த காட்டு யானைகள்
ADDED :107 days ago
கூடலுார்: மங்கலதேவி கண்ணகி கோயிலில் பகலில் காட்டு யானைகள் உலா வந்தன.
தமிழக கேரள எல்லையில் உள்ள மங்கலதேவி கண்ணகி கோயிலில் சித்ரா பவுர்ணமி விழா மே 1ல் நடந்தது. தமிழக கேரள பக்தர்கள் அதிக அளவில் பங்கேற்றனர். ஆண்டிற்கு ஒருமுறை ஒருநாள் மட்டுமே நடக்கும் இவ்விழாவைத் தவிர மற்ற நாட்களில் இக்கோயிலுக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதியில்லை. மே 1ல் விழா நடந்து முடிந்த பின் கடந்த 2 நாட்களாக கோயில் வளாகத்தை சுற்றிலும் காட்டு யானைகள் அதிகமாக உலா வருகின்றன. காட்டு மாடுகளும் ஆங்காங்கே முகாமிட்டுள்ளன. இரவில் மட்டும் உலா வந்து கொண்டிருந்த காட்டு யானைகள் தற்போது பகலிலும் அதிகமாக வரத் துவங்கியுள்ளதால் கண்ணகி கோயில் வளாகத்தை ஒட்டி முகாமிட்டுள்ள கேரள வனத்துறையினர் அலுவலக கட்டடத்திற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.