உடுமலையில் ஆர்ஷ வித்யா பீடம் துவக்க விழா
ADDED :10 hours ago
உடுமலை: உடுமலையில் ஆர்ஷ வித்யா பீடம் துவக்க விழா நடந்தது. மாரியம்மன் கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் தலைமை வகித்தார்.
ரிஷிகேஷ் ஸ்ரீ சாஷாத் கிருதாநந்த சரஸ்வதி சுவாமிகள், ஆனைகட்டி சதாத்மாநந்த சரஸ்வதி சுவாமிகள் ஆகியோர் உடுமலை ஆர்ஷ வித்யா பீடத்தை துவக்கி வைத்து பேசினர். ஆன்மிக பெரியோர், தொழிலதிபர்கள், நகர முக்கிய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். விஷ்வ ஹிந்து பரிஷத், தர்ம ரக்ஷன சமிதி, ஆர்ஷ வித்யா பீடம், தத்துவ ஞான சபை, ஸ்ரீ மாதா லலிதா சகஸ்ரநாம அமைப்பு, ஸ்ரீ லட்சுமி நரசிம்மர் வேத ஆகம பாடசாலை உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்திருந்தனர். உடுமலை ஆர்ஷ வித்யா பீடத்தின் தலைவர் டாக்டர் தாமரைசெல்வன், ஆச்சாரியர் ஸ்ரீதேவி, செயலாளர் ஆறுமுகம் உள்ளிட்டோர் பேசினர்.