வல்லக்கோட்டை முருகன் கோவிலில் வைகாசி கிருத்திகை விழா விமரிசை
ADDED :27 days ago
காஞ்சிபுரம்: வல்லக்கோட்டை முருகன் கோவிலில் வைகாசி கிருத்திகை விழா இன்று விமரிசையாக நடந்தது.
ஒரகடம் அடுத்த, வல்லக்கோட்டை கிராமத்தில், அருணகிரிநாதரால் பாடல் பெற்ற வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இங்கு, வைகாசி கிருத்திகை தினத்தை முன்னிட்டு, அதிகாலை 4:00 மணிக்கு கோ பூஜை மற்றும் 5:00 மணிக்கு முருகப் பெருமானுக்கு 16 வித திரவியங்களால் சிறப்பு அபிஷேகங்கள் நடந்தன. மூலவர், சந்தன காப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார். உற்சவர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி பலவித நிற சாமந்தி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையடுத்து, ஸ்ரீபெரும்புதுார் த.வெ.க., – எம்.எல்.ஏ.,தென்னரசு, 108 மரக்கன்றுகளை நந்தவனத்தில் நட்டார்.