கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலில் 26ம் தேதி குரு பெயர்ச்சி : 29ல் குருபூஜை
புதுச்சேரி: கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் வரும் 26ம் தேதி குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை, 29ம் தேதி 189ம் ஆண்டு குரு பூஜை நடக்கிறது.
நவக் கிரகங்களில் ஒருவரான குரு பகவான் வரும் 26ம் தேதி மிதுன ராசியில் இருந்து கடக ராசிக்கு இடம் பெயர்வதையொட்டி, கருவடிக்குப்பம் குரு சித்தானந்த சுவாமி கோவிலில் அன்று சிறப்பு பூஜை நடக்கிறது. காலை 6 மணிக்கு கணபதி ேஹாமத்துடன் துவங்கி, காயத்ரி மந்திர ேஹாமம், நவக்கிரக ேஹாமங்கள் நடக்கிறது. காலை 10 மணிக்கு குரு பகவானுக்கு மகா அபிேஷகம், 11 மணிக்கு மகா தீபாராதனை நடக்கிறது. வரும் 29ம் தேதி குரு சித்தானந்த சுவாமியின் 189ம் ஆண்டு குரு பூஜை நடக்கிறது. அதனையொட்டி வரும் 28 ம் தேதி மாலை கணபதி ேஹாமத்துடன் குரு பூஜை துவங்கி இரவு 8 மணிக்கு பூர்ணாஹூதி நடக்கிறது. மறுநாள் 29ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ேஹாமம், நவக்கிரக ேஹாமம், ருத்ர ஜபத்தை தொடர்ந்து, காலை 7:30 மணிக்கு சித்தானந்த சுவாமிக்கு மகா
அபிஷேகம், பூர்ணாஹூதி, கலசாபிேஷகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனை நடக்கிறது.தொடர்ந்து அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலை 6 மணிக்கு தீபாராதனை, இரவு 10 மணிக்கு அர்த்த ஜாம பூஜை நடக்கிறது. குரு பெயர்ச்சி சிறப்பு பூஜை மற்றும் குரு பூஜைக்கு நன்கொடை அளிக்க விரும்புவோர் தேவஸ்தானத்தில் கொடுத்து ரசீது பெற்றுக் கொள்ளலாம். மேலும், குரு பெயர்ச்சி மகா ேஹாமத்தில் பிரதிஷ்டை செய்த கலசம் பெறவும், மற்றும் சிறப்பு தரிசனம் செய்யவும் வரும் 26ம் தேதிக்கு முன்பாக தேவஸ்தான அலுவலகத்தில் ரூ. 400 செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். மேலும், மகா அபிஷேகத்திற்கு வேண்டிய பால், தயிர், நெய், பழவகைகள், விபூதி, சந்தனம் உள்ளிட்ட அபிேஷக பொருட்களை வரும் 26ம் தேதி காலை 10 மணிக்குள்ளும், 29ம் தேதி காலை 7 மணிக்குள்ளும் அளிக்கலாம்.