நவபாஷாணம் வரும் பக்தர்கள் அதிகரிப்பு
ADDED :108 days ago
தேவிபட்டினம்: தேவிபட்டினத்தில் பிரசித்தி பெற்ற நவபாஷாண நவக்கிரகம் அமைந்துள்ளது. இங்கு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யவும், பல்வேறு தோஷ நிவர்த்தி வேண்டி பரிகார பூஜைகள் செய்யவும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். தினமும் பக்தர்கள் வந்து செல்லும் புண்ணிய தலமாக உள்ளது.
கோடை விடுமுறையிலும், வார விடுமுறை தினமான நேற்று மற்ற நாட்களை விட பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. வெளி மாவட்டங்களில் இருந்து சுற்றுலா வாகனங்களில் கூட்டம் கூட்டமாக பக்தர்கள் வருகை தந்து நவகிரகத்தை வழிபட்டனர்.