உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் பிரம்மோற்சவ தேரோட்டம்

சிவகாசி சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நடந்தது. சிவகாசி விஸ்வநாத சுவாமி கோயிலில் வைகாசி பிரம்மோற்சவ திருவிழாவை மே 17 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. காலையில் சுவாமிகளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு 8:00 மணி அளவில் சுவாமி ஊஞ்சலில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து 11 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் சுவாமி பூத வாகனம், ரிஷப வாகனம், குதிரை வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் புரிவார். ஒன்பதாம் நாள் திருவிழாவான இன்று தேரோட்டம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேர் இழுத்தனர். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !