உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோயிலில் குருப்பெயர்ச்சி

 குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோயிலில் குருப்பெயர்ச்சி

 சோழவந்தான்; குருவித்துறை சித்திரரதவல்லப பெருமாள் கோயிலில் குருப்பெயர்ச்சி விழா நடந்தது.

இக்கோயிலில் ஆண்டுதோறும் குருபெயர்ச்சி விழா விமரிசையாக நடைபெறும். இந்தாண்டு மே 24 முதல் கால லட்சார்ச்சனையுடன் விழா தொடங்கியது. நேற்று மே 26 காலை 9:00 மணி வரை 5 கால லட்சார்ச்சனை நடந்தது. தொடர்ந்து புண்யகாவாசனம், சாத்துமுறை கோஷ்டி, யாகசாலை ஆரம்பம், மஹா சங்கல்பம்,யாகம், கடம்புறப்பாடு நடந்து 11:08 மணிக்கு குருபகவானுக்கு திருமஞ்சனம் செய்யப்பட்டு மஹா ஆரத்தி நடந்தது. சிறப்பு அலங்காரம் செய்து பூஜைகள் நடந்தன. ஆர்.டி.ஓ‌, கருணாகரன், துணைத் தாசில்தார் செந்தில்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். நிர்வாக அலுவலர் கார்த்திகை செல்வி, பணியாளர்கள் ஏற்பாடுகளைச் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !