உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாலமேடு கோயில்களில் கும்பாபிஷேகம்

பாலமேடு கோயில்களில் கும்பாபிஷேகம்

 பாலமேடு: பாறைபட்டியில் காமாட்சி அம்மன் கோயில், பரவை நவசக்திநகர் மாரியம்மன் கோயில்களில் இன்று கும்பாபிஷேகம் நடந்தது.

பாறைப்பட்டியில் மே 26ல் முதல்கால யாக பூஜைகள் கணபதி ஹோமத்துடன் துவங்கின. காலை 4ம்கால யாக பூஜைகளை தொடர்ந்து கடம் புறப்பாடானது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க விமானம் மற்றும் மூலஸ்தான கோபுர கலசங்களில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மன், சுவாமி, பரிவார தெய்வங்களுக்கு புனிதநீர் ஊற்றி சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை காமாட்சி அம்மன் பூசாரி வகையறாக்கள், பொந்துகம்பட்டி, கோடாங்கிபட்டி, பாறைப்பட்டி கிராமத்தினர் செய்திருந்தனர்.

* பரவை பேரூராட்சி சாமிநாத நகரில் நவசக்தி நாகமுத்து மாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகத்தையொட்டிஇன்று காலை 2ம் கால யாக பூஜை நடந்தது. பின்பு கடம் புறப்பாடாகி, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க அம்பாளுக்கும், விமான கோபுர கலசத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டது. அம்மன், பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பூஜாரி சுதந்திர மணி சிறப்பு பூஜை செய்தார். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !