திருப்பாதிரிப்புலியூர் விநாயகர் கோவிலில் சந்தனகாப்பு அலங்காரம்
ADDED :38 days ago
கடலுார்: விநாயகர் கோவிலில் வைகாசி விகாசத்தையொட்டி சிறப்பு பூஜை நடந்தது.
கடலுார், திருப்பாதிரிப்புலியூர் தங்கராஜ் நகர் வலம்புரி அற்புத விநாயகர் கோவிலில் வைகாசி விகாசம் நட்சத்திரத்தையொட்டி நேற்று முன்தினம் காலை வள்ளி தெய்வானை சமேத சுப்ரமணியர் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. மூலவர் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தர். மாலை சிறப்பு பூஜை, தீபாராதனை முடிந்து கோவில் உள்புறப்பாடு நடந்தது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.