சிங்கம்புணரி வடக்குவாசல் செல்வி அம்மன் பூச்சொரிதல் விழா
ADDED :15 hours ago
சிங்கம்புணரி; சிங்கம்புணரி அருகே வடக்கு வாசல் செல்வி அம்மன் பூச்சொரிதல் விழா நடந்தது. ஜூன் 25ஆம் தேதி காப்பு கட்டுதலுடன் தொடங்கிய இத்திருவிழா பத்து நாள் மண்டகப்படியாக தொடர்ந்து நடந்து வந்தது. ஜூன் 1ஆம் தேதி புரவி எடுப்பும், எருது கட்டும் நடந்தது. கோயில் முன்பாக கட்டப்பட்ட வட கயிறில் கோயில் மாடுகளும் அதைத் தொடர்ந்து வீட்டு மாடுகளும் கட்டப்பட்டு அவிழ்த்து விடப்பட்டன. இன்று பூச்சொரிதல் விழா நடந்தது. ஏராளமான பெண்கள் பூத்தட்டு எடுத்து வந்து அம்மனுக்கு பூச்சொரிதல் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை அ.காளாப்பூர் கிராமத்தினர் செய்திருந்தனர்.