திரவுபதியம்மன் கோவிலில் தீமிதி திருவிழா தொடக்கம்
ADDED :3 hours ago
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டையை அடுத்த ஸ்ரீ விலாசபுரம் திரவுபதி அம்மன் கோவிலில், தீமிதி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.
விழாவையொட்டி, கோவில் வளாகத்தில் நேற்று முதல் வரும் 29ம் தேதி வரை மகாபாரத சொற்பொழிவு நடைபெறுகிறது. மேலும், ஏராளமான பக்தர்கள், காப்பு கட்டி விரதத்தைத் துவங்கியுள்ளனர்.
வரும் 18ம் தேதி பகாசூரன் கும்பம் நிகழ்ச்சியும், அதை தொடர்ந்து தெருக்கூத்து நாடக நிகழ்ச்சிகளும் நடக்க உள்ளன.
முதல் நாள் நிகழ்ச்சியாக அர்ஜுனன் வில் வளைப்பு நாடகம் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, 22ம் தேதி அர்ஜுனன் தபசு நிகழ்ச்சியும் நடைபெறும்.
திருவிழாவின்
பிரதான நிகழ்வான துரியோதனன் படுகளம், வரும் 28ம் தேதி நடைபெற உள்ளது. அன்று மாலை பக்தர்கள் திரளாக பங்கேற்கும் தீமிதி திருவிழா நடைபெறும்.