உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இன்று ஆனி பஞ்சமி; வராகியை வழிபட தடை நீக்கி வெற்றி கிடைக்கும்!

இன்று ஆனி பஞ்சமி; வராகியை வழிபட தடை நீக்கி வெற்றி கிடைக்கும்!

வளர்பிறையில் வரும் ஐந்தாம் திதி வளர்பிறை பஞ்சமி என்று அழைக்கப்படுகிறது. இது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நாளாகக் கருதப்படுகிறது. சப்தகன்னியர்களில் ஒருவரான வராகி அம்மன், மகா விஷ்ணுவின் வராக அவதாரத்தின் சக்தியாகக் கருதப்படுபவர். இவரை வழிபட வளர்பிறை பஞ்சமி திதி மிகச்சிறந்த நாளாகும்.


பஞ்சமி திதி வராகி அம்மன், சக்கரத்தாழ்வார் மற்றும் நாக தேவதைகளை வழிபட மிகவும் உகந்த நாளாகும். வளர்பிறை பஞ்சமி அன்று வராகி அம்மனை மனமுருகி வழிபடுவது, சகல காரியத் தடைகளையும் நீக்கி, வெற்றி மற்றும் செல்வ வளத்தை அருளும் என்று நம்பப்படுகிறது. எதிரிகளின் தொல்லை குறையவும், பண வரவு அதிகரிக்கவும் இந்த வழிபாடு செய்யப்படுகிறது. சப்தகன்னியர்களில் ஒருவரான வராகி அம்மன், மகா விஷ்ணுவின் வராக அவதாரத்தின் சக்தியாகக் கருதப்படுபவர். இவரை மனதார வழிபட்டால், தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ள தடைகள் நீங்கி, செல்வம் பெருகும் என்பது ஐதீகம். வாழ்வில் எடுக்கப்படும் அனைத்து முயற்சிகளிலும் வெற்றி கிடைக்க அருள்புரிவார். இன்று வீட்டில் தீபம் ஏற்றி வராஹியை வழிபடுவோம்.. நிம்மதி பெறுவோம்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !