உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் /  விசூர் திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விமரிசை

 விசூர் திரவுபதியம்மன் கோவிலில் துரியோதனன் படுகளம் விமரிசை

 உத்திரமேரூர்: விசூர் திரவுபதியம்மன் கோவிலில், அக்னி வசந்த உத்சவத்தின், 18வது நாளான நேற்று காலையில், துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலையில் தீமிதி திருவிழாவும் விமரிசையாக நடந்தன.

உத்திரமேரூர் அடுத்த விசூர் கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில் அக்னி வசந்த உத்சவம், 4ம் தேதி கொடி யேற்றத்துடன் தொடங்கியது. தினமும் மதியம் 2:00 மணி முதல், மாலை 5:00 மணி வரை மஹாபாரத சொற்பொழிவு நடந்து வருகிறது. மேல்நேத்தப்பாக்கம் ஆன்மிக சொற்பொழிவாளர் பார்த்திபன், மஹாபாரத சொற்பொழிவாற்றி வருகிறார். பெருங்கட்டூர் மாரி துரைசாமி மஹாபாரத இசை கவி வாசித்து வருகிறார். கடந்த 12ம் தேதி முதல், தினமும் இரவு 10:00 மணிக்கு சிறுவஞ்சிப்பட்டு ரேணுகாம்பாள் கட்டை கூத்து நாடக மன்றத்தினரின் மஹாபாரதம் நாடகம் நடந்து வருகிறது. உத்சவத்தின், 18வது நாளான நேற்று காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சியும், மாலை தீமிதி திருவிழாவும் விமரிசையாக நடந்தன. இதில், காப்பு கட்டி விரதமிருந்த பக்தர்கள் தீமிதித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !