தனுஷ்கோடி ராமர் கோயிலில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்
ADDED :5 hours ago
ராமேஸ்வரம்: ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் விபீஷணர் பட்டாபிஷேக நிகழ்ச்சி கோலாகலமாக நடந்தது.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் ராமலிங்க பிரதிஷ்ட விழா நேற்று தொடங்கியது. 2ம் நாளான நேற்று காலை 8:00 மணிக்கு கோயிலில் இருந்து ராமர், சீதை, லட்சுமணர் மற்றும் ராவணன் தம்பி வீபீஷணர் பல்லக்கில் புறப்பாடாகி தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் எழுந்தருளினர். அங்கு இலங்கை மன்னராக வீபீஷணருக்கு பட்டம் சூட்டும் நிகழ்ச்சி நடந்தது. இதன் பின் ராமர், சீதை, லட்சுமணருக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.